பழனி நீதிமன்ற வளாகத்தில் மரம் நடும் விழா

பழனி நீதிமன்ற வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது.பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரண்ராஜ் தலைமையில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர் சத்திராஜ் பத்துக்கும் மேற்பட்ட கன்றுகளை நீதிமன்ற வளாகத்தினுள் நட்டு வைத்தார் இவ்விழாவில் பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜன் குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பாண்டியராஜன் மற்றும் வழக்கறிஞர்கள் சிவக்குமார், மதியழகன், சுரேந்திரன், சத்தியசீலன், வாய்க்கால்சாமி, குமாரசாமி, ஜீவானந்தம், உட்பட வழக்கறிஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..