சிறுகரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா 

சிறுகரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுகரம்பலூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் பள்ளி மாணவ மாணவிகள்  ஆசிரியர்கள் மற்றும் அந்த பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நேருவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி மற்றும்  கட்டுரை போட்டி மாறுவேடப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சார்பில் பேனா நோட்டு மற்றும் வடிவியல்  பெட்டி பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார் பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் இளைய பெருமாள் ,பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா, உதவி ஆசிரியர் ஜெயகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லட்சுமி ,அங்கன்வாடி ஆசிரியர் மருதாம்பால், மாணவர்கள் ,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.