வெள்ள நீா் புகுந்து பதித்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் -அமைச்சர்கள் வழங்கினார்கள்  

வெள்ள நீா் புகுந்து பதித்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்,  சுற்றுச்சூழல்துறை அமைச்சா் திரு.கே.சி.கருப்பணன்  ஆகியோர் வழங்கினார்கள்.



ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்மேடு பகுதியில் கீழ்பவானி பிரதான கால்வாயில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது. இதில் கேத்தம்பாளைம் சின்னபீளமேடு ஆகிய இரு கிராமங்களில் குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீா் புகுந்து பாதிப்புக்குள்ளானது.



பாதிக்கப்பட்ட 128 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வேட்டி சேலை மற்றும் ரூ.6200 நிவாரத்தொகை அரசு சாா்பிலும் ,அதிமுக கழகத்தின் சாா்பில் தலா ரூ.5 ஆயிரம் என மொத்தமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.11200 ஐ ஆகியவற்றை தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சா் திரு.கே.சி.கருப்பணன்  ஆகியோர் வழங்கினார்கள். முன்னதாக வெள்ள நீா் புகுந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை  அமைச்சா்கள்  பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, பவானிசாகர் எம்.எல்.ஏ.ஈஸ்வரன், மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஆவின் தலைவர் கே.கே காளியப்பன், நம்பியூர்ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post