கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் விழிப்புணர்வு முகாம்

கள்ளச் சாராயம் மற்றும் மதுபானம் விழிப்புணர்வு முகாம்.

 


 

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஐபிஎஸ் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிதம்பரம் அடுத்த கிள்ளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கள்ளச்சாராயம் மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கள்ளச்சாராயம் குறித்தும் மற்றும் மதுபானத்தினால் ஏற்படும் உயிரிழப்பு உடல் தீங்கினை பற்றியும் பொது மக்களுக்கும் மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு ஆய்வாளர் திருமதி தீபா விளக்கம் அளித்தார்.

 


 

மேலும் போலி மதுபான விற்பனை செய்பவர்களை கள்ளச்சாராய தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்குமாறும் அப்படி தகவல் அளிக்கும் நபர்களின் பெயர்களை நாங்கள் வெளிக் கொண்டு வராமல் பாதுகாப்போம் மற்றும் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுப்போம் என்று கிள்ளை உதவி ஆய்வாளர் திரு.ரவி தெரிவித்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post