கடலூரில் உலக தர தின விழா விழிப்புணர்வு பேரணி

கடலூரில் உலக தர தின விழா விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர்  அன்புச்செல்வன் துவக்கி வைத்தார்.

 


 

கடலூர் தலைமை மருத்துவமனை வளாகத்தில் உலக தர தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வெ. அன்புச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

 


 

இந்த விழிப்புணர்வு பேரணியில் கடலூர் தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் மருத்துவர்பி.என். ரமேஷ் பாபு,மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் சாய்லிலா, நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் குமார், ரத்த வங்கி அலுவலர் மருத்துவர்ஷபிசா மற்றும்  தேசிய தரக்கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் பரிமேலழகர் மருத்துவர் பிரேமா,  

செவிலியர்கள் மாணவ மாணவிகள் மருத்துவத் துறை பணியாளர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.