பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டுவிழா

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.



பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் உலகின் பல பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.எனவே பக்தர்களுக்கு நிர்வாகம் சார்பில் போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று தொடர்ந்து பக்தர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அதனைப் போக்கும் விதமாக புதிதாக பதவியேற்றுள்ள திருக்கோயில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமையில் பழனி அருகே உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து திருக்கோயிலுக்கு  குழாய் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்காக இன்று கருணை இல்லத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இத்திட்டத் திற்காக திருக்கோயிலில் இருந்து ரூ 22.72 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பாலாறு அணையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு நீரேற்றும் கிணற்றிலிருந்து 250mm விட்டமுள்ள நீருந்து குழாய் மூலம் நீர் எடுத்துச் செல்லப்பட்டு மலைக் கோயிலுக்கு பின்புறம் உள்ள அன்பு இல்லத்தில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து மலை கோயில் வளாகம் ,தண்டபாணி நிலையம் ,சிறுவர் பூங்கா ,இடும்பன் கோயில் ,இடும்பன் மலை கோயில் ,வேலவன் சாத்திரம் முதலான பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து பகிர்மான குழாய்கள் மூலம் தினசரி குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர்      பி .ராமச்சந்திரன் கண்காணிப்பு பொறியாளர் என். ரவீந்திரன் செயற்பொறியாளர் எம் .முத்து பழனியப்பன் மற்றும் பழனி தேவஸ்தான பொறியாளர்கள் ,அதிகாரிகள் , தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் தேவஸ்தான முறை குருக்கள்  சரவணன் மற்றும் தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post