பவானிசாகர் அணையில் இருந்து- பவானி கூடுதுறை வரை பத்து இடங்களில் தடுப்பணைகள்

பவானிசாகர் அணையில் இருந்து- பவானி கூடுதுறை வரை பத்து இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு.

 


 

பவானி ஆற்றில் பவானிசாகர் அணையில் இருந்து- பவானி கூடுதுறை வரை  ஆற்றின் உபரி நீரை சேமிக்கும் வகையில்  பத்து இடங்களில் தடுப்பணைகள் கட்டுவது சம்பந்தமாக தடப்பள்ளி -அரக்கன் கோட்டை-பவானிநதி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில்  மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்திடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மற்றும் மாவட்ட அமைச்சர்கள் ஆகியோரிடமும் நேரில் இது குறித்து நேரில் சென்று விளக்கம் அளித்தோம். இதனிடையே மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பேரில்  திட்டம் மற்றும் திட்டவடிவமைப்பு செயற்பொறியாளர் 

ஈரோடு மற்றும் திட்டம் மற்றும் திட்டவடிவமைப்பு செயற்பொறியாளர் கோபி செட்டிபாளையம் அவர்களின் தலைமையில் பாசன சங்க தலைவர் சுபி. தளபதி மற்றும் விவசாய சங்கத்தினர் மேற்படி பத்து இடங்களை ஆய்வு செய்தனர்.