கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் சர்வதேச மழலையர் திரைப்படத் திருவிழா

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் சர்வதேச மழலையர் திரைப்படத் திருவிழா நடைபெற்றது.கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் குழந்தைகள்
தினத்தினை முன்னிட்டு பள்ளி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மழலையர்
திரைப்படத் திருவிழாநடைபெற்றது. மிகவும் அரிதான தென்னிந்தியாவில் முதலாவதாக நடைபெற்றது. இந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் கோபி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மழலையின் பள்ளிகளான ஒனென்ஸ் கிட்ஸ், லல்லபி பிரைமரி பள்ளி, ட்ரீம்ஸ் கிட்ஸ், ஹலோ கிட்ஸ்,லல்லபி மழலையர் பள்ளிகளை சேர்ந்த மாணாக்கர்கள் ஸ்ரீவெங்கடேஸ்வரா  சர்வேதேச மாண்டிஸோரி பள்ளி,கோபி மற்றும் ஒத்தக்குதிரை மாணாக்கர்கள் கண்டு களித்தனர். ஒனென்ஸ் கிட்ஸ் பள்ளி நிறுவனரும் முதல்வருமான திருமதி குணசுந்தரி அவர்கள் விழாவினை குத்துவிளக்கேற்றி வாழ்க்கைத்திறன் பற்றி மிகச்சிறப்பாக உரையாற்றினார்.மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி
கருப்பணன் அவர்கள் வாழ்த்து செய்தி அனுப்பினார். தனித்துவமான இந்நிகழ்ச்சியில் இப்பள்ளி இயக்குனர்கள் ஜோதிலிங்கம்,மோகன்குமார் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் மகேஷ் கே நாராயணன் வரவேற்று விழாவினை தொடங்கி வைக்க துணை முதல்வர் முது விஜயன் நன்றி கூற விழா இனிதே சிறப்பாக முடிவுற்றது.