சாணார்பட்டி அருகே மழை வேண்டி அரச, வேப்ப மரத்திற்கு திருமணம் செய்த பொதுமக்கள்

சாணார்பட்டி அருகே மழை வேண்டி அரச, வேப்ப மரத்திற்கு திருமணம் செய்த பொதுமக்கள் 

 


 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மழை வேண்டி அரச மற்றும் வேப்ப மரத்திற்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்து வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கம்பளிபட்டி ஊராட்சியில் மழை வேண்டியும், வேகமாக பரவிவரும் பலவித நோய்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டியும் அங்குள்ள காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

 


 

பின்னர் கோவில் முன் உள்ள அரச மரம் மற்றும் வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அரசமரத்தை மணமகனாகவும் வேப்பமரத்தை பெண்ணாகவும் பாவித்து வேட்டி சேலை கட்டி மாலை அணிவித்து  வேதமந்திரம் ஓத திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சிக்கு  வந்திருந்தவர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மழை குறைந்து வரும் போதும் இது போன்ற வழிபாடுகள் பல காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நிலை நிலவி வருகிறது.மேலும் மக்கள் பல்வேறு நோய்களில் சிரமப்பட்டு வருகின்றனர்.  எனவே மக்கள் நோயின்றி வாழவும் வளம் பெறுவோம் இந்த வழிபாடு நடத்தப்பட்டது என்றனர். நிகழ்ச்சியில் ஊர் நிர்வாகிகள் நீலமேகம், பழனிமுத்து ,சர்க்கரை  பெற்றோர் ஆசிரியர் கழக சங்க,ஊராட்சி செயலர் லோகு, தலைவர் கணேசன், வியாபார சங்கத்தில் சௌந்தராஜன் உள்பட பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.