திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னேற்றக் கழகத்தினர் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் 

இந்து கோவில்கள் குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னேற்றக் கழகத்தினர் திருப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 
கடந்த 9ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அசிங்கமாக பொம்மைகள் இருந்தால் அது இந்து கோவில் என  பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகவும்  திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து முன்னேற்ற கழகத்தினர் சார்பில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அக்கட்சி தலைவர் கோபிநாத் தலைமையில் புகார் மனு அளித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னேற்ற கழகத்தின் தலைவர் கோபிநாத் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் இந்து மதத்தை தாக்கியும் தொடர்ந்து பேசி வரும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் எனவும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இந்துமதத்தின் குறிப்பிட்ட சமூகத்தை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது எனவும் ஜாதியின் பெயரை சொல்லி கட்சி நடத்தி வரும் திருமாவளவன் போன்றவர்கள் தொடர்ந்து இதுபோல பேசினால் சாலைகளில் நடமாட முடியாது என இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்வதாகவும் காட்டமாக பேட்டியளித்தார்.