மேட்டுக்கடை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுவீச்சில் உதவிகள் 

மேட்டுக்கடை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுவீச்சில் உதவிகள் வழங்கப்படுகிறது.

 


 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை கீழ்பவானி வாய்க்கால், உக்கரம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்கடை என்ற பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் வாய்க்காலில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நம்பியூர் ஒன்றியதுக்கு உட்பட்ட சின்னபீளமேடு பகுதியில் வாய்க்காலின் தண்ணீர் பொது மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்வெளி பகுதியிலும் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். உடனடியாக தமிழக பள்ளி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு  தகவல் தெரிவிக்கப் பட்டது.

 


 

அமைச்சர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பள்ளிகல்விதுறை இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தரவுவின் பேரில் நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆலோசனையின் படி நம்பியூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் நேற்று இரவு  முதல் தற்போது வரை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முழுவீச்சில் செய்துவருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இச்சேவைகளை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

 

 

Previous Post Next Post