குறிஞ்சிப்பாடி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அதிமுகவில் புதிதாக பொறுப்பேற்று கொண்ட குறிஞ்சிப்பாடி  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

 


 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சொரத்தூர் இரா.இராஜேந்திரன் , அதிமுகவின் கழக அமைப்பு செயலாளராக,

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடபாடி.கே.பழனிசாமி அவர்களும் இணைந்து அமைப்பு செயலாளராக நியமனம் செய்தார்கள்.

 

அதன்படி குறிஞ்சிப்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் இரா.இராஜேந்திரன்  நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு குறிஞ்சிப்பாடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ புத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனை வழிபட்டுவிட்டு, பின்பு குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், வடலூர் நகர கழகத்தின் செயலாளர் சிஎஸ்.பாபு உட்பட அதிமுகவின் பொறுப்பாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தனக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கிய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றிகளை தொண்டர்கள் மத்தியில் தெரிவித்துகொண்டார்.