நம்பியூரில் ஆண்களுக்கான இலவச நவீன கருத்தடை சிகிச்சை முகாம்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நம்பியூரில் ஆண்களுக்கான இலவச நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடந்தது.

 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நம்பியூரில் ஆண்களுக்கான தழும்பு இல்லாத அறுவை சிகிச்சை முகாம்  சிறப்பாக நடைபெற்றது.இம் முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.அருள்மொழி துவக்கி வைக்க பவானி அரசு மருத்துவமனை சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர்.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.நம்பியூர் மருத்துவ அலுவலர் டாக்டர்.ரங்கசாமி  முன்னிலை வகித்தார்.  இந்த முகாமில் 8 நபர்களுக்கு ஆண்களுக்கான நவீன தழும்பு இல்லாத அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

முகாம் நடைபெற தகுதியுள்ள நபர்களை ஊக்குவிப்பு செய்து இந்த முகாமிற்கு அழைத்து வரும் பணிகளில் நம்பியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ் ராஜன், முகமது மைதீன், தங்கசாமி மற்றும் தண்டபாணி ஆகியோர் ஊக்குவிப்பு செய்து முகாமிற்கு ஆறு நபர்களை அழைத்து வந்தனர். அதேபோல் சிறுவலூர் வட்டாரத்திலிருந்து சுகாதார ஆய்வாளர்கள் சரவணகுமார் மற்றும் ரகுபதி ஆகியோர் இரண்டு நபர்களை அழைத்து வந்திருந்தனர் மேற்படி அறுவை சிகிச்சை செய்துகொண்ட 8 நபர்களுக்கும் அரசு மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை ஒவ்வொருவருக்கும் ரூ. 1100/-வழங்கப்பட்டது மேற்படி ஊக்குவிப்பு செய்த சுகாதார ஆய்வாளர்களுக்கு ஒரு நபருக்கு ரூ 500/-ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.முகாம் இறுதியில் நம்பியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அருள்மொழிக்கு அனைவருக்கும் நன்றி கூறினார்கள். இம்முகாமில் நம்பியூர் வட்டார மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் கந்தசாமி கலந்து கொண்டார்கள்.

Previous Post Next Post