கோபியில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரம்

கோபியில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை  ஆதரித்து அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரம் செய்தார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரியூர் ஊராட்சி் நஞ்ச கவுண்டபாளையம் பகுதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ருக்குமணி, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும்  சுமதி, மற்றும் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ,ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஏ.திலகவதி ஆகியோருக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் சிட்கோ சேர்மன் சிந்து ரவிச்சந்திரன், ஆவின் தலைவர் காளியப்பன், பாரியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என்.ஆர்.பழனிச்சாமி, சொசைட்டி தலைவர் சண்முகம், கந்தவேல்முருகன், காளியப்பன் என்.ஆர்.பி.பூபதிபாலாஜி,வாசு மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.