மொபைல் கடை மீது மோதியதில் 20 வயது மிக்க இளம்பெண் படுகாயம்

மொபைல் கடை மீது மோதியதில் 20 வயது மிக்க இளம்பெண் படுகாயம் அடைந்துள்ளார். பூந்துறை பஸ் நிறுத்தத்தில் தனியாருக்கு சொந்தமான மொபைல் கடை உள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் அரச்சலூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த லாரி பூந்துறை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் வந்ததும் தனது கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் உள்ள மொபைல் கடை மீது மோதியது. இதில் 20 வயது மிக்க இளம்பெண் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் பற்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.