எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் 21ம் தேதி பவர் கட்


எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் 21ம் தேதி பவர் கட்


எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் 21ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது இதனால் இந்த மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 21ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ஈரோடு மின் வினியோக செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.  இந்த மின் நிலையத்திற்கு உட்பட்ட எழுமாத்தூர்,  மன்கரடு,  பாண்டிபாளையம்,  எல்லகடை,  காதகிணறு,  செல்லாத்தா பாளையம்,  மொடக்குறிச்சி,  குலவிளக்கு,  60வேலம்பாளையம்,   வடுகபட்டி,  எல்லப்பாளையம்,  மணியம் பாளையம், வே. புதூர்,   கணபதிபாளையம்,  ஏரப்பம்பாளையம்,  மேட்டுப்பாளையம்,  ஆனந்தம் பாளையம்,  மின்ன காட்டு வலசு,  வெப்பிலி,  24 வேலம்பாளையம்,  ஆகிய பகுதிகளில் வரும் 21ஆம் தேதி மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.