குதிரை வண்டி மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பக 21 ஆம் ஆண்டு ரேக்ளா பந்தயம்



குதிரை வண்டி மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பக 21 ஆம் ஆண்டு ரேக்ளா பந்தயம்

 


 

ஈரோடு மாவட்டம் பவானி குதிரை வண்டி மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பாக காடையாம்பட்டி பகுதியில் 21 ஆம் ஆண்டாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் சேலம் கோவை திருப்பூர் திருச்சி நாமக்கல் மதுரை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் போட்டியில் கலந்து கொண்டனர். மொத்தம் நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. முதல் பிரிவு உள்ளூர் குதிரைகள்,43,45 ஹிந்து குதிரைகள் கலந்து கொண்டனர் உள்ளூர் குதிரைகள் சுமார் 20க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டனர் அடுத்த பிரிவு 43 இன்ச் இதில் 15 குதிரைகள் கலந்து கொண்டனர் 45 இஞ்சில் 20க்கு மேற்பட்ட குதிரைகள் கலந்துகொண்டன இவைகள் எட்டு கிலோமீட்டர் பத்து கிலோமீட்டர் 12 கிலோமீட்டர் என்ற தொலைவுக்கு போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகைகளும் கேடயமும் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கேசி கருப்பண்ணன் வழங்கினார் இவருடன் பவானி நகர செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான என் கிருஷ்ணராஜ், பவானி குமாரபாளையம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ரேக்ளா சங்கம் தலைவர் வெங்கடேஷ் என்கின்ற வெங்கடேசன் பவானி ஒன்றிய செயலாளர் தங்கவேல் பவானி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரவி மற்றும் ஆய்வு அதிமுகவைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்

 

 



 

Previous Post Next Post