சித்தோடு அருகே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு - தரமற்ற 2900 கிலோ வெல்லம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செயல்பட்டு வரும் வெளிமார்க்கெட்டில் திடீரென உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் தரமற்ற 2900 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்தனர்



 

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள வெல்ல மண்டியில் விவசாயிகளுக்கான வெல்லம் நாட்டுச்சக்கரை அச்சுவெல்லம் உள்ளிட்டவை மொத்த விற்பனை மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் வெல்லம் வெள்ளை மெருகேற்றி காண்பதற்காக வெல்ல உற்பத்தியாளர்கள் மைதா சர்க்கரை சூப்பர் பாஸ்ட் போன்ற கெமிக்கல்களை அதிகமாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி வெளி மார்க்கெட்டில் இன்று திடீர் சோதனை மேற்கொண்டார். இதில் தரமற்றதாக கருதப்பட்ட வெள்ளத்தை ஆய்வுக்காக சுமார் 2900 கிலோவை பறிமுதல் செய்து அதனின் மாதிரிகளை சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

 


 

பின்னர் விவசாயிகளிடையே வெள்ளத்தை மாற்றுவதற்காக கலப்படம் செய்ய பயன்படுத்தும் கெமிக்கல்கள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நியமன அலுவலர் கலைவாணி இதுவரை இந்த வெள்ள மண்டியில் ஐந்து முறை ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் இது தொடர்பாக தரமற்ற வெள்ளத்தை விற்பனைக்குக் கொண்டு வந்த வெல்ல உற்பத்தி யாளர்கள் இரண்டு நபர்கள் மீது நீதிமன்றம் வழக்கு தொடர இருப்பதாக கூறினார். மேலும் தற்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில் இவ்வாறு வெல்ல உற்பத்தியாளர்கள் தரமற்ற வெல்லத்தை கொண்டு.வந்தால் பறிமுதல் செய்து வழக்கு வழக்கு செய்யப்படும் என்று கூறினார். இந்த திடீர் ஆய்வினால் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் வெல்ல மண்டி பரபரப்பாக இருந்தது

Previous Post Next Post