கடலூரில் ஆணழகன் போட்டி 

கடலூரில் ஆணழகன் போட்டி  நடைபெற்றது. 

 


 

கடலூர் தனியார் கல்லூரி ஒன்றில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக கடலூர் மத்திய மாவட்ட செயலாளரும் தொழில் துறை அமைச்சருமான எம் சி சம்பத் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் வருகிற

ஜனவரி மாதம் சென்னையில் தமிழ்நாடு ஆணழகன் போட்டி நடைபெற உள்ளது. இதை யொட்டி, கடலூர்மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம், கடலூர் எக்ஸ்ட்ரீம் மசில்ஸ் ஜிம் சார்பில் கடலூர் ஆணழகன் போட்டி கடலூரில் நடைபெற்றது. 50கிலோ முதல் 80 கிலோவுக்கு மேற்பட்டோருக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 115 பேர் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர். இதில், ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இரவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட  தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் எம்.அரசு, புனித வளனார் கல்லூரி செயலர் ஜி.பீட்டர் ராஜேந்திரம் , அதிமுக கடலூர் நகர செயலாளர் குமரன் , மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல்குமார் , கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி நகரத் துணைச் செயலாளர் கந்தன் , முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஆர்.வி.மணி , தமிழ்ச்செல்வன் , எம். ஜி ராமச்சந்திரன் , என்.கே.ராஜ் , அன்பு , மற்றும் தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் , நாகராஜன் , செந்தில்முருகன் , மார்க்கெட் சுரேஷ் , தானம் நகர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வென்றவர்களில் 10 பேர் மாநில ஆணழகன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஜிம் மாஸ்டர் கே.கோபிநாத் செய்திருந்தார்.