3,5, 8 ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்

3,5, 8 ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தென்காசியில் நடைபெற்ற தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக மதுரை மாவட்ட தலைவர் ராஜரத்தினம்  செயல்பட்டார். தேர்தல் பார்வையாளராக சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சங்கர் கலந்து கொண்டார். மாவட்ட தலைவராக செல்வசுந்தர ராஜ்,  மாவட்டச் செயலாளராக கனேசன்,  மாவட்ட பொருளாளராக 
மதியழகன் ,  மாவட்ட அமைப்புச் செயலாளராக சுதாகர், மாவட்ட தலைமையிடச் செயலாளராக . நந்தகுமார் , மாவட்ட துணைத் தலைவர்களாக மனோகர், ராஜதுரை, பழனியம்மாள், மாவட்ட இணைச்செயலாளராக ஜான்சன்  ஆகியோர்  பொதுக்குழுவில்
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ,
மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக 2006 முதல் உட்படுத்த வேண்டும் . 24 ஆண்டுகாலமாக அரசு உயர் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்காமல் உள்ளது உடனே இந்த ஆண்டு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். 3,5, 8 ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.      4,10, 11 ,12 ஆகிய அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் நலன் கருதி உயர் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வுப்பணி அறை கண்காணிப்பாளர் பணியில் இருந்து முற்றிலுமாக விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட சங்கத்தின் பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார்.