ஸ்ரீபாடலீஸ்வரர் திருக்கோயில் திருக்குளத்தில் அழுகிய நிலையில் 30வயது தக்க ஆண் சடலம்

கடலூரில் மிகவும் புகழ்பெற்ற பழைமையான ஸ்ரீபாடலீஸ்வரர் திருக்கோயில் திருக்குளத்தில் அழுகிய நிலையில் 30வயது தக்க ஆண் சடலம்.

 


 

கடலூர் மாவட்டத்தில் கடலூரில் மிகவும் புகழ்பெற்ற பழைமை வாய்ந்த திருகோவில் திருப்பாப்புலியூர் அருள்மிகு ஸ்ரீ பாடலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பழைமைவாய்ந்த கோவில்  குளம்உள்ளது. இக்குளத்தில் 30வயது மதிக்க தக்க  ஆண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த சடலத்தை வெளியே எடுக்கபட்டு பின்னர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிணவறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இறந்தவர் ஓட்டல் (எ) சேகர் த/பெ.ராதாகிருஷ்ணன் எ. வடுகப்பாளையம் கடலூர் - OT  என தெரியவந்துள்ளது. பின்னர்  உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இக்குளத்தை பல ஆண்டுகளாக தூர்வாரவில்லை. உடனே தூர் வார வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் கோவில் நிருவாகிகளிடம் இந்து தமிழர் கட்சி சார்பில் மனு அளித்தது குறிப்பிட்ட தக்கது.