பழநி முருகன் கோயிலில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் மூலம் பணியாளர்களுக்கு பயிற்சி

பழநி முருகன் கோயிலில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் மூலம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில், பணியாளர்களுக்கு தீ விபத்து விழிப்புணர்வு,  தடுப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.செயல் அலுவலர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் நிலைய அலுவலர்கள் பழநி கமலகண்னண் மற்றும்   தீ தடுப்புகுழு உறுப்பினர்கள் முன்னிலைவகித்தனர்.இதில் சமையல் செய்யும்போது காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைக்க வேண்டும். மேல்மாடியில் ஒருவர் விபத்தில் சிக்கினால் அவரை மீட்பது எப்படி, தீயணைப்புக் கருவிகளை கையாளும் விதம் குறித்து செயல்முறை விளக்கமாக, கோயில் பணியாளர்கள், செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி அளித்தனர்.பழநி போன்ற முக்கிய கோயிலில் தீ மற்றும் விபத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் காணொலி கண்காட்சி மூலம் அறிவுரை வழங்கினார். அதன்படி, மலைக்கோயில், உபகோயில்களில் தீவிபத்தை தடுக்க தீயணைப்புகருவிகள் தயார் நிலையில் உள்ளன.தீ விபத்து, கூட்டநெரிலில் பக்தர்கள் மயங்கிவிழுந்தால் முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் பணியாளர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இப்பயிற்சிகள் அடிக்கடி வழங்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவித்தனர்.இந்நிகழ்வில்  பொறியாளர் குமார், அழகர்சாமி, திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் மேற்பார்வையாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், திருக்கோயில் பாதுகாப்பு செக்யூரிட்டிகள், துப்புரவு பணியாளர்கள், அன்னதான சமையல் ஊழியர்கள்,  மடப்பள்ளி  சமையல்  ஊழியர்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.