திருமணம் ஆகி 5 மாதமே ஆன இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை

திருமணம் ஆகி 5 மாதமே ஆன இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலைதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் சுட்டகுண்டா  என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் இளம்பெண் ஒருவர்  கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். விசாரணையில் அவர் பெயர் ரேவதி என்பதும் திருமணம் ஆகி 5 மாதமே ஆகியுள்ளதும் தெரியவந்துள்ளது. செல்போன் டவர் இல்லாததால் தன் கணவரிடம் பேசுவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது கொலை நடந்ததாக தெரிகிறது. ரேவதி அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகள் மாயமாகியுள்ளது. பெண்ணின் சடலத்தை மீட்டு உமராபாத் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.