பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியல் வசூல் ரூபாய் 52 லட்சத்தி 66 ஆயிரம்

பண்ணாரி அம்மன் கோவிலில் உண்டியல் வசூல் ரூபாய் 52 லட்சத்தி 66 ஆயிரம்தமிழகத்தில் புகழ் கோயில்களில் ஒன்றான சத்தியமங்கலத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அருள்மிகு பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 52 லட்சத்து 66ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளனர். சத்திய மங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற முக்கிய தலமாகும்இக்கோவிலில் மாதம்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையாளர் பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையாளர் பொறுப்பு சபர்மதி ஈரோடு உதவி பெறும் ஆணையாளர் நந்தகுமார் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டுராஜன் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் கோவில் பணியாளர்களும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் காந்தி கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பணம் என்னும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இதில் மொத்தம் உண்டியல் வசூல் ரூபாய் 52 லட்சத்து 66 ஆயிரத்து 380 ரூபாய் 412 கிராம் தங்கமும் 563 கிராம் வெள்ளியும் இருந்ததாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.