பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் 6 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் 6 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றதுபாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னி மலை காலை கணபதி ஹோமம் மூலமந்திர ஹோமம், ஸ்ரீஷீத்தம், புருஷீத்தம்,யாகசாலை பூஜை,பூர்ணாஹீதி,தீபாராதனை ,மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் ,விமானங்கள் ,ஆகியவைகளுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது.நிகழ்ச்சியில் கீழப்பாவூர், பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, செட்டியூர், கல்லூரணி உட்பட கீழப்பாவூர் வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது  மாலை சாயரட்சை ,தீபாராதனை, பின்னர் வள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி  அம்பாள் சப்ரங்களில் திருவீதியுலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்