ரூ.73 கோடியில் எந்தெந்த பணிகள் நடைபெற்றன - எம்எல்ஏ கீதாஜீவன்

தூத்துக்குடியில் சிறப்பு நிதி ரூ.73 கோடியில் எந்தெந்த பணிகள் நடைபெற்றன?மாநகராட்சி ஆணையர் உடனடியாக பதிலளிக்க கீதாஜீவன் எம்எல்ஏ கோரிக்கை

 


 

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில்  ரூ.73 கோடி  சிறப்பு நிதியில் எந்தெந்த பணிகள் செய்யப்பட்டுள்ளன?  என திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இதுகுறித்து அவா் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: மழைக்காலங்களில் மாநகரத்தில் மழைநீா் தேங்குவதால் ஏற்படும் சுகாதாரச் சீா்கேடுகள் குறித்தும், அதற்கு உடனடியாகத் தீா்வு காண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கோரிக்கை வைத்தேன். அதன்படி, தூத்துக்குடி மாநகரத்தில் வடிகால் பிரச்னைக்கு தீா்வு காண சிறப்பு நிதியாக ரூ.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநகராட்சி சாா்பாக அந்த நிதியில் எந்தெந்த பணிகள் எடுத்துச் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து மாநகராட்சி ஆணையா் உடனடியாக பதில் தர வேண்டும்.

 

மேலும், தூத்துக்குடி மாநகரில் மழைநீா் வடிகால் கடலுக்குச் செல்லும் வகையில் அமைத்திட வேண்டும். தற்போது சாலைகளை வெட்டி மழைநீா் வெளியேற்றப்பட்ட இடங்களில் சிறுபாலங்கள் அமைத்திட வேண்டும். தூத்துக்குடி லூா்தம்மாள்புரம், ஸ்டேட் பாங்க் காலனி, DS F  நிறுவனம் அருகில் உள்ள பம்ப் அறைகள் மின்சாரம் இல்லா விட்டால் கழிவுநீா் வெளியேற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டு வீடுகள் மற்றும் தெருக்களில் சாக்கடை நீா் பெருகி சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. அதற்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் சிறப்பு நிதி ரூ. 73 கோடியில் லூா்தம்மாள் புரம், வெற்றிவேல்புரம், நேதாஜி நகா், தனசேகரன் நகா், ரஹ்மத்நகா், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகா், ராஜகோபால்நகா், மகிழ்ச்சிபுரம் ஆகிய இடங்களில் உடனடியாக மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post