தமுமுக சார்பில் பாபர் மசூதி விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி

தாம்பரத்தில் தமுமுக சார்பில் பாபர் மசூதி விவகாரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 


 

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தமுமுக சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றத  இதில் பெண்கள்,ஆண்கள் குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாம்பரம் சண்முகம் சாலையில் பேரணியாகச் சென்று பின்னர் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு துணையாக மே 17 இயக்கம்,விடுதலை சிறுத்தைகள்,தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் கலந்து கொண்டனர்