இணைய தளங்களை தடை செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் ஆர்பாட்டம்

ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் தான் தெரியாமல் நடித்து விட்டதாகவும்
இனிமேல் அதுபோன்று நடக்காது என தங்களிடம் நடிகர் விஜய்சேதுபதி
தெரிவித்ததாக வணிகர் சங்கங்களின் பேர் அமைப்பினர் கூறியுள்ளனர்.அமேசான் ஃப்ளிப்கார்ட் மண்டி போன்ற ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களை
தடை செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்
திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும்
இருந்து ஏராளமான சில்லறை வணிகர்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக முழக்கங்கள்
எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசிய பேரமைப்பின்
மாவட்ட தலைவர் பிரபாகரன் அடுத்த கட்டமாக உண்ணாவிரதம் போன்ற
போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மண்டி ஆன்லைன்
விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி தெரியாமல் நடித்து விட்டேன் எனக்
கூறியதாகவும் இனிமேல் இதுபோன்று நடக்காது என தங்கள் அமைப்பின்
தலைவர் தெரிவித்ததாக கூறினார்.