தமிழ்ப் பண்பாட்டு மையம், சுப்ரீம் மொபைல்ஸ் , அரிமா சங்கம் இணைந்து நடத்திய தாள் மடிப்பு கலை (ஓரிகாமி) நிகழ்ச்சி

தமிழ்ப் பண்பாட்டு மையம், சுப்ரீம் மொபைல்ஸ் , அரிமா சங்கம் இணைந்து நடத்திய தாள் மடிப்பு கலை (ஓரிகாமி) நிகழ்ச்சி நடைபெற்றது.



ஓரிகாமி எனும் தலைப்பில் தாள் மடிப்பு கலை ஒரு நாள் பயிற்சி முகாம் குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரிமா சங்க தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். இப் பயிற்சி வகுப்பில்  4-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர்க்கு  தஞ்சையை சேர்ந்த பயிற்சியாளர் தியாக சேகர் கலந்து கொண்டு சிறப்புப் பயிற்சி வழங்கினார்.



நிகழ்வில் பயிற்சியாளர் குழந்தைகளுக்கு தொப்பி , நேரு தொப்பி , போலீஸ் தொப்பி என பல வகை தொப்பிகள் செய்ய சொல்லி கொடுத்தார். பின்னர் வன்னத்தாள்களில் பட்டாம்பூச்சி, சுற்றி சுழலும் ஹெலிகாப்டர், இறக்கை அசைக்கும் கொக்கு, மீன், படகு, கப்பல் போன்ற உருவங்களை செய்ய பயிற்றுவித்தார்.



இந்நிகழ்வு குறித்து பயிற்றுநர் தியாக சேகர் கூறும்போது  ஓரிகாமி பொழுது போக்கிற்கு மட்டுமல்லாமல் அறிவியல், கணிதத்தை வளர்க்கும் கலை ,மேலும் தாங்களே சில பொம்மைகளை உருவாக்குவதன் மூலம் மகிழ்வோடு தன்னம்பிக்கையும், கவனிக்கும் கூர்மைத் திறனும் குழந்தைகளுக்கு  வளர்கிறது என்றார். இந்நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்  பங்கேற்றனர். நிகழ்வினை தமிழ்ப் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் யோகி செந்தில் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்.


Previous Post Next Post