சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு சிறந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கான விருது

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரிக்கு சிறந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது.இந்திய தேசிய தொழில்நுட்ப கல்வி சங்கத்தின் 49-வது தேசிய மாநாடு , ஒடிஸா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது இவ்விழாவில் சிறந்த தனியார் பொறியியல் கல்லூரிக் கான தேசிய விருது, ஆகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் முனைவர் அனில் Dசக கர புத்தே அவர்கள் வழங்கினார், கல்லூரியின் வேலை வாய்ப்பு, தரம், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், ஆராய்ச்சி மேம்பாடு திறன் மேம்பாடு, போன்ற காரணிகளின் அடிப்படையில் விருது வழங்கப்பட்டது, இவ்விருதானது 29-30 நவம்பர் 2019 அன்று நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இதில் கல்லூரியின் சார்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் கல்வித்துறை தலைவர் முனைவர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பெற்றுக் கொண்டனர்,