ஒன்பதாம் வகுப்பு  மாணவன்  கிணற்றில் விழுந்து பலி

ஒன்பதாம் வகுப்பு  மாணவன்  கிணற்றில் விழுந்து பலி.

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா நெல்லிக்குப்பம் கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ராஜி வயது 14 த/பெ ராயர் இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தூண் நெல்லிக்குப்பம் உயர்நிலைப் பள்ளியில் படித்து ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.  இன்று  மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டு பின்பு நண்பர்களுடன் குளிப்பதற்கு அருகிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள கேணியில் குளிக்கச் சென்றார். அப்போது  நான்கு மாணவர்கள் உடன் இருந்தனர் நீச்சல் தெரியாத மாணவன் ராஜி கிணற்றில் இறங்கி  நீச்சல் தெரியாமல் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதை கண்டறிந்த விவசாய  வயலில் வேலை செய்த முதியவர்கள் மாணவர்கள் அலறியடித்து ஓடும் போது விசாரணை செய்தனர். அப்போது கிணற்றில் குளிக்க   வந்த ராஜி எங்களோடு வந்தார். அவருக்கு நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி விட்டார் என்று கூறிவிட்டனர். இதை அறிந்த விவசாயிகள் உடனே  குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறை நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டு எடுத்தனர்.

இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் மேலும் மாணவன் ராஜியின் உடலை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Previous Post Next Post