பெண்ணை கற்பழித்து ஏமாற்றிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய இளைஞரின் தாயார் போக்சோ சட்டத்தில் கைது
பெண்ணை கற்பழித்து ஏமாற்றிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய இளைஞரின் தாயார் போக்சோ சட்டத்தில் கைது

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா எழுத்தூர் கிராமத்தை சேர்ந்த வாதி மகள் சுகிதா என்பவர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லப்பைக்குடிக்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

 

வாதியின் மகள் சுகிதாவை அதே கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன்த/பெ ராமலிங்கம் என்பவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பெண் கேட்டுள்ளார் அதற்கு வாதி என் மகள் படிக்க வேண்டும் என்று கோரி பெண் தர மறுத்துள்ளார். பின்பு  சுகிதாவை பார்த்திபன் காதலிப்பதாக சொல்லி ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளார். இதனால் சுகிதா வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார் இதைப்பற்றி அவர் தாய் வாதி ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் கடந்த 26 .5.2019 தேதி பார்த்திபன் நமது வீட்டுக்கு வந்து தன்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக தெரிவித்தார் .

 

அதிர்ச்சி அடைந்த தாயார் இது சம்பந்தமாக வாதியும் அவரது கணவர் ராமலிங்கம் இருவரும் பார்த்திபன் வீட்டிற்கு சென்று என் மகளை உன் மகன் கெடுத்து விட்டதாக கூறி நியாயம் கேட்டுள்ளார்கள். அதற்கு நாங்கள்தான் பெண் கேட்டோமே நீங்கள் பெண் தர மறுத்ததால்  என் மகன் உன் மகளை கெடுத்துள்ளான் என்றும் இது பற்றி  பேசினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று பேசியும் திட்டியும் உள்ளார்கள்.

பின்னர் வாதி மகள் சுகிதாவை திட்டக்குடி பகுதியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுகிதா 7 மாத கர்ப்பிணி பெண்ணாக இருப்பதாக தெரியவந்தது. பின்னர் இச்சம்பவம் குறித்து வாதி விருத்தாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில்  விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிருபா லட்சுமி வழக்கு பதிவு செய்து பார்த்திபன் வீட்டில் விசாரணை மேற்கொண்டார்.விசாரணையில் பார்த்திபன் வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது இதனால் அவரின் தாயார் சித்ரா வை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.