பவானி தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் 

பவானி தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாவட்டம் பவானி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தபடி பவானி தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை  கடந்த எட்டாம் தேதி முதல் பெறப்பட்ட மனுக்கள் தாக்கல் செய்து வந்தனர். நேற்று வரை தலைவர் பதவிக்கு ஒருவரும் உறுப்பினர் பதவிக்கு 4 பேரும் பவானி ஒன்றிய அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.இன்று பெரியபுலியூர்ஓடத்துறை ஆலந்தூர் வரத நல்லூர் குருப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் இதுவரை செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களில் பெரிய புலிகளைச் சேர்ந்த புஷ்பம் கணவர் குருசாமி முன்னாள் பெரியபுலியூர் பஞ்சாயத்து தலைவர் தனது ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உடன் வந்திருந்த மனுத்தாக்கல் செய்தனர் இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.