திமுகவினர் சாலை மறியல்

திமுகவினர் சாலை மறியல்

 


 

நல்லூர் ஒன்றிய 19வது  வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி திமுகவினர் சாலை மறியல் , பரபரப்பு வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஒன்றிய 19 வார்டு அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்ட நிலையில்  திமுக வேட்பாளரை கடத்தியதாக மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ, தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

 

கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் 19 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு  அதிமுக சார்பில் முன்னாள் சேர்மன் ராஜலெட்சுமி ராஜேந்திரன், திமுக சார்பில் கலைவாணி சதிஸ், மாற்று வேட்பாளராக  சித்ரா  முருகானந்தம் ஆகியோரும், அ,ம,மு,க வேட்பாளர்  ரம்யா ராமலிங்கம் ஆகிய ஐந்து பேர்  வேட்பு மனு தாக்கல் செய்தனர்  நேற்று 19. ந் தேதி சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் , மாற்று வேட்பாளர்கள்  வாபஸ் பெற மதியம் மூன்று மணி வரை  நேரம் ஒதுக்கபட்டது , 

 

 

அதில் பல சுயேட்சை வேட்பாளர்களும்,  அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் மாற்று வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர்இந்நிலையில் திருவட்டதுறை, கொடிக்களம், கூடலூர் ஆகிய மூன்று  ஊராட்சிகளை சேர்ந்த  19 வார்டு ஒன்றிய  கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலைவாணி,  சித்ரா, ரம்யா  உள்ளிட்ட நான்கு பேரும்  வேட்பு  மனுவை வாபஸ் பெற்றனர்  

 

அதனால் அதிமுக வேட்பாளர் ராஜலெட்சுமி ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார்இது குறித்து தகவலறிந்த கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வெ, கணேசன் எம்எல்ஏ தலைமையில் திமுக வேட்பாளர் கடத்தபட்டதாக கூறி தேர்தல் அலுவலர் ரவிசந்திரனிடம்   மனு அளித்தனர் பின்னர், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்