நெய்வேலியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது

நெய்வேலியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

 


 

கடலூர் மேற்கு மாவட்டம் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திட்டக்குடி எம்எல்ஏ

சி வெ  கணேசன்  தலைமையில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் எம்எல்ஏ முன்னிலையில்  நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் நகர் பெரியசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தாமரைச்செல்வன்  மதிமுக மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ,குணசேகரன், ராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுக்கூர் ,ஐ. ஜே.கே மாவட்ட செயலாளர் ஜெயவேல், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் துரை ,மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட பொறுப்பாளர் அறிவழகன், திமுக மாவட்ட அவைத்தலைவர் நந்த கோபால கிருஷ்ணன் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அருணா, கோதண்டபாணி மங்களூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி ,தெற்கு ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.