உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர்  க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில், பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான
புகார்களை தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் கட்டுபாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட தேர்தல் அலுவலர் க.விஜயகார்த்திகேயன் திறந்து வைத்து பார்வையிட்டார். திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரண தேர்தல்கள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, டிசம்பர் 27ம் தேதி திருப்பூர்
மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதற்கட்டமாகவும், மற்றும் 30 ஆம் தேதி அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம் உடுமலைப் பேட்டை மற்றும் மடத்துக்குளம் 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக என தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு  உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று முதல் (09.12.2019) பெறப்பட்டு வருகிறது. மேலும், மாநில தேர்தல் ஆணையத்தின், அறிவுரையின் படி தேர்தல் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பொதுமக்கள் ஏதேனும் புகார்களை தெரிவிக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும்,திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், தேர்தல் நடத்ததை விதி மீறல் மற்றும் ஏதேனும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 7023 மற்றும் 0421-2971494 என்ற எண்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. எனவே, உள்ளாட்சித் தேர்தல்-2019 தொடர்பான புகார்களை மேற்படி கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அலுவலர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டுமென  கலெக்டர் அறிவுறுத்தினார்.