குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறி மாத்திரையை கொடுத்து பணம் பறிப்பு

குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறி மாத்திரையை கொடுத்து பணம் பறித்து ஏமாற்றிய கும்பல் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர் பேர் கைது.

 


 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் குழந்தை இல்லாத நபர்களை அடையாளம் கண்டு மாத்திரைகள் கொடுத்து பணம் பறித்து போலி டாக்டர்களை பாவூர் சத்திரம் போலீசார் கைது செய்தனர்

 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் செட்டியூர், பனையடிபட்டி போன்ற ஊர்களில் திருமணமாகி குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியரை அடையாளம் கண்டு தங்களை டாக்டர்கள் என்று கூறிக்கொண்டு மூன்று நபர்கள் கார்களில் வந்து மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்தனர். இந்த மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குழந்தைப்பேறு அடையாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அந்த மர்ம நபர்கள் கொடுத்த தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் அந்த நபர்களிடம் பேசுவது இல்லை இதனால் சந்தேகம் அடைந்த இந்த நபர்கள் மற்ற சில எண்களில் இருந்து அவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வரவழைத்தனர் பின்னர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து பாவூர்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர் விசாரணையில் இவர்கள் வெகுநாட்களாக இதுபோல் பல்வேறு கிராமங்களில் குழந்தைப்பேறு அடைவதற்கான மருந்து மாத்திரைகள் கொடுத்து பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து சுமார் 15 ஆயிரம் முதல்  40 ஆயிரம் வரை பணம் பெற்று உள்ளதாகவும் இதுபோல் பல லட்சம் மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

விசாரணையில் இவர்கள் திருவண்ணாமலை முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் சீனிவாசன் (வயது 42) என்பவர் கைது மற்றும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் கோகுல் (21) தேன்மலை பகுதியை  சேர்ந்த அன்பழகன் மகன் தினேஷ் ( 21) ஆகிய  இருவரிடமும் தீவிர விசாரணை வருகின்றனர்  இவர்கள் கொடுத்த மாத்திரைகளை டாக்டர்கள் பரிசோதனை செய்த பொழுது அந்த மாத்திரைகள்  சத்து மாத்திரைகள் மற்றும் சத்து பொடிகள் என்பது தெரியவந்துள்ளது இவ்வாறு போலி டாக்டர்கள் கைது பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.