பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பைபாஸ் பேருந்து நிலையத்தில் சேலம் டூ கோவை செல்லும் பேருந்துகள் நிற்பதில்லை என்று பொதுமக்கள் புகார்

பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பைபாஸ் பேருந்து நிலையத்தில் சேலம் டூ கோவை செல்லும் பேருந்துகள் நிற்பதில்லை என்று பொதுமக்கள் புகார் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பைபாஸ் பேருந்து நிலையம் பகுதியில் சேலம் முதல் கோவை செல்லும் பயணிகள், கோவை முதல் சேலம் செல்லும் பயணிகள் இந்த பைபாஸ் பேருந்து நிறுத்தும் இடத்திற்கு தினமும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். பவானி, மேட்டூர், அந்தியூர், கவுந்தப்பாடி, சித்தோடு, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கோவை நோக்கி செல்லும் பயணிகள் லட்சுமி நகர் பகுதியில் சேலத்தில் இருந்து வருகின்ற சேலம் கோவை அரசு மற்றும் தனியார் டூர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றன.ர் சேலத்தில் இருந்து வருகின்ற திருப்பூர் கோவை செல்லும் பேருந்துகள் சேலத்தில் லட்சுமி நகர் பேருந்து நிலையம் நிற்காது என்றும் கூறுகின்றனர். அதேபோல் 1 டூ 1 என்றும் கூறுகின்றனர். அதேபோல் பயணிகள் நிற்பதற்கு நிழற்குடைஇருந்தாலும் பேருந்துகள் அந்த நிழற்குடை முன்பு நிற்பதில்லை. பேருந்துகள் அனைத்தும் நடுரோட்டில் நிற்கின்றனர். அல்லது நிழற்குடை இருக்கும் இடத்திற்கும் முன்பாகவே பேருந்துகள் நின்று விடுகின்றனர். இதனால் பயணிகள் ஆபத்தான பேருந்து பயணத்தை மேற்கொள்ள இருப்பதால் இதற்கு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் பேருந்து நிறுத்தம் இடத்தில் தண்ணீர் வசதியும் எதுவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை செய்து தரவில்லை என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.