வேப்பூர் ரோட்டரி சங்கம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி

வேப்பூர் ரோட்டரி சங்கம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி.

 


 

கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ரோட்டரி சங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளி சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரோட்டரி சங்கம் தலைவர் தாசன் தலைமை தாங்கினார் தலைமையாசிரியர் செல்வகுமார், துணைத் தலைமையாசிரியர் ஞான பிரகாசம் , ஸ்ரீ பாலாஜி அறக்கட்டளை தலைவர் அன்பு குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக புற்றுநோய் தடுப்பு சங்கம் உறுப்பினர் தென்னாப்பிரிக்கா ஜெயாகாந்த் அரந்த் மோட்லே பால கங்காய் மற்றும் காவல் ஆய்வாளர் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக புகையிலை ஒழிப்பு குறித்த முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர். இதில் ரோட்டரி சங்கம் பொருளாளர் அமானுல்லாகான் செல்வராசு சரவணன் குபேரன் ராமகிருஷ்ணன் சதீஷ்குமார் பாஸ்கர் வின்சென்ட் ஸ்ரீபிரியா தாசன் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.