பனைமரமும் அன்றாட வாழ்வின் வருமானமும் பயிலரங்கம

பனைமரமும் அன்றாட வாழ்வின் வருமானமும் பயிலரங்கம.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூரில்  அமைந்துள்ள ஜெ.எஸ்.ஏ வேளாண்மை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்அப்பகுதி பெண்களுக்கு சுதேசி இயக்கம் மற்றும் சுதேசி  தொழில் பயிற்சி  ஆராய்ச்சி நிருவனம் வேளாண் கல்லூரியும் இணைந்து பனைமரமும் அன்றாட வாழ்வின் வருமானமும் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் தானுநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சுதேசி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த  குமரி நம்பி மற்றும் சித்ரா நம்பி சென்னை பனையாழி நிறுவன வைத்தியர் தமிழ் கொடி  தமிழ்நாடு மரபு வழி சித்த மருத்துவர் சங்கம் திருவாசகம் ஆகியோர் கலந்துகொண்டு பனை மரங்களின் அவசியம் குறித்தும் பனை பொருட்களில் எப்படி வருமானம் ஈட்டுவது என்பது குறித்தும் பயிற்சி அளித்தனர்.  இந்நிகழ்ச்சியில் வேளாண்  கல்லூரியின் தாளாளர் முனைவர் ஜெயராமன், செயலாளர் முனைவர் அருண்,  இயக்குனர் நடராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பயிலரங்கத்தில் முனைவர் ரம்யா வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சியின் நிறைவாக  அனந்தநாயகி நன்றியுரையாற்றினார் இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.