கடலூர் மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் உள்ளாட்சித் தேர்தலுக்கான மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் உள்ளாட்சித் தேர்தலுக்கான மையங்களை திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர்  அரசு கலைக்கல்லூரியில்  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன்  ஆய்வு மேற்கொண்டார் . பின் அவர் கூறியது கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏற்பாடு விரிவாக செய்யப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள 683 ஊராட்சிகளுக்கு 14 ஊராட்சியில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு  தேர்தல் நடைபெற உள்ளது.   இத்தேர்தல் நியாயமான முறையிலும் வெளிப்படையாகவும் நடைபெறும் என்றும் தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.  மேலும்  தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.