பழனியில் இந்து தமிழர் கட்சி இந்து தமிழர் முன்னணி சார்பாக அனைத்து அதிகாரிகளிடம் மனு

பழனியில் இந்து தமிழர் கட்சி இந்து தமிழர் முன்னணி சார்பாக அனைத்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர்பழனியில் கிரிவலப்பாதையில் வெளியூரில் இருந்து வரக்கூடிய பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் வருகின்றனர். இந்த நேரத்தில் வட மாநிலத்தில் இருந்து வருகை தந்து மேளம், பலுன் ,டோல் போன்ற பொருட்களை பக்தர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் சாலையின் நடுவில் நின்றுகொண்டு சத்தங்கள் எழுப்பிக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். இதனால் சாலையில் நெரிசல் ஏற்படுவதுடன் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் தேவஸ்தானம் நகராட்சி ,காவல்துறை என அனைவரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர். மற்றும் பக்தர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் சாலையில் நின்று வியாபாரம் செய்பவர்களை விரட்டுகின்றனர். இதுபோன்ற சமயத்தில் சாலையின் ஓரங்களில் வியாபாரம் செய்யும் சிறு  வியாபாரிகளும் விரட்ட படுகின்றனர். ஆனால் இவர்கள் பழனியை பூர்வீகமாக கொண்டவர்கள். இந்த நடவடிக்கைகளால் பழனியிலே பிறந்து வளர்ந்த இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைகின்றது. எனவே இந்த சிறு வியாபாரிகளின் பிரச்சனைகளை போக்கும் வண்ணம் இந்து தமிழர் கட்சி இந்து தமிழர் முன்னணியின் சார்பாக , சிறுவியாபாரம் செய்யும் சிறுவியாபாரிகளுக்கு, முறையான இட ஒதுக்கீடு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் முறைபடுத்த வேண்டுதல் சார்பாகவும், வடமாநிலங்களில் இருந்து கிரிவல பாதையில்  டோல், கொட்டு பலூன் விற்பனை செய்யக்கூடிய வெளிமாநில நபர்களின்  அடையாள ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் மற்றும் சிறு வியாபாரியும் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் வியாபாரம் செய்வதற்காக இடம் ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல  கோரிக்கையை  வலியுறுத்தி தமிழர் கட்சியின் சார்பில் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார், மாநில குழு உறுப்பினர் பழனி மனோஜ் குமார் மருதுபாண்டி ஆனந்த் ஹரி காளிமுத்து பாலா அருண் அனைத்து பொறுப்பாளர்கள் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று  மனு  அளித்தனர். மேலும் சிறு வியாபாரிகளின்  நலன் கருதி சார் ஆட்சியர், வட்டாட்சியர், நகர ஆணையர், பழனி சரக துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் போன்றவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.பழனி சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்க பலரும் வெளியூரில் இருந்து வருவதாகவும் இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் பழனி வாழ்மக்கள் கேட்கின்றனர்