அருள்மிகு ஸ்ரீ மகாகணபதி ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ செல்லியாண்டி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

அருள்மிகு ஸ்ரீ மகாகணபதி ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ செல்லியாண்டி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்ஈரோடு மாவட்டம் செம்புளிசாம்பாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ செல்லியாண்டி அம்மன் மற்றும் ஸ்ரீ மாதேஸ்வரன் திருக்கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்  தற்போது புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக 30க்கும் மேற்பட்ட வேத மந்திரங்கள் 20க்கு மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அந்த யாகத்தில் கலசங்கள் ஆவாகனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து யாக குண்டத்தில் பல்வேறு வகையான பொருட்கள் பழங்கள் காய்கறிகள் இவைகள் அனைத்தும் யாகத்தில் போடப்பட்டு இறுதியாக மகா பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கலசத்திற்கு குணத்திற்கும் கற்பூரதீபம் காட்டப்பட்டது. தொடர்பு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை வேத மந்திரங்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கோயிலை சுற்றி வலம் வந்ததை தொடர்ந்து கோபுர உச்சியில் உள்ள கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அருளைப் பெற்று சென்றனர்.