சாராய வியாபாரி ராமச்சந்திரன் குண்டர் தடுப்புக் காவலில் கைது.

சாராய வியாபாரி ராமச்சந்திரன் குண்டர் தடுப்புக் காவலில் கைது.

 


 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி படைவீட்டம்மன் கோவில் அருகில் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் தேவி மற்றும் போலீசார் மது குற்றத்தை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர். அப்போது தட்டாஞ்சாவடி சிலகாரதெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் வயது 49த/பெ முருகேசன் என்பவர் 165 லிட்டர் சாராயம் வைத்திருந்தார். உடனே அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து சாராயத்தை பறி முதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர் மீது பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் 10 சாராய வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்தது. ஆகையால் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஐபிஎஸ் அவர்களின் பரிந்துரையின் பேரிலும் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் ஐஏஎஸ் அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.