உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பின் சார்பில் மகாத்மா கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பின் சார்பில் மகாத்மா கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 

 


 

திருப்பூரில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சிலர் இணைந்து உதவிடத்தான் பிறந்தோம் என்ற அமைப்பினை துவங்கி அதன் மூலம் இயலாத பொதுமக்களுக்கு பல பொது சேவைகள் செய்து வருகின்றனர். 

 


 

அதுபோல் அமராவதிபாளையம் பகுதியில் உள்ள மகாத்மா கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு இவர்களே சமைத்து பரிமாறினார். வரவிருக்கும் கிருஸ்துமஸ் விழாவை ஒட்டி குழந்தைகளுடன் கேக் வெட்டி கிருத்துமஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகளை மகிழ்வித்தனர்.

 


 

மேலும் அவர்களு கூறுகையில் ரோட்டோர இயலாத மக்களுக்கு உணவளித்து வருகிறோம். அரசு பள்ளி சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்களை  இரண்டு பள்ளிகளில் வரைந்துள்ளோம். மேலும் மருத்துவம் கல்வி சம்பந்தமான உதவிகளும் செய்து வருகிறோம். இயலாதவர்களுக்கு தேவையான உதவிகளை  எங்களால் இயன்ற அளவு தொடர்ந்து செய்வோம் என்று தெரிவித்தனர்.