அதிகாரிகள் தயார் வேட்பாளர்கள் ஆர்வம் குறைவு
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மனுக்களை பெறுவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை.


 


 

தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 7ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தபடி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை பெறுவதற்கு இன்றுமுதல் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று வேட்பாளர்கள் தேர்தல் மனுக்களை பெறுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஒரு சில வேட்பாளர்கள் மட்டும் மனுக்களை பெறுவதற்கு வந்து கொண்டுள்ளனர். ஆனால் மக்கள் மத்தியில் வேட்புமனுவை பெறுவதற்கு ஆர்வம் இல்லாததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் காற்று வாங்கிக் கொண்டு உள்ளது. வேட்புமனு  பெறுவதற்கு இன்று தேதி அறிவிக்கப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.