பவானியில் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மௌன ஊர்வலம்பவானியில் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மௌன ஊர்வலம் நடைபெற்றது.

 


 

ஈரோடு மாவட்டம் பவானியில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்து மூன்றாம் ஆண்டை முன்னிட்டு பவானி நகர செயலாளரும் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான என் கிருஷ்ணராஜ் தலைமையில் பவானி ஒன்றிய செயலாளர் எஸ் எம் தங்கவேல் அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர் சரவணபவா முன்னிலையில் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சருமான கே சி கருப்பண்ணன்  பவானி பூக்கடை சாலையில் இருந்து மௌன ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பவானி புதிய பேருந்து நிலையம் வந்து அடைந்தனர்.

 


 

பின்னர் ஊர்வலத்தை சிறப்பு  பேருந்து நிலையத்தில் வைக்கப் பட்டிருந்த அம்மாவின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை  செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இதில் ஈரோடு புறநகர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கேகே விசுவநாதன், ஈரோடு புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் தட்சிணாமூர்த்தி,முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் என் ஆர் கோவிந்தராஜ், மற்றும் அதிமுகவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்