கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நீர்வள இடங்களை ஆய்வு




கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நீர்வள இடங்களை ஆய்வு மேற்கொண்டனர்.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதி மற்றும் பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருவதால் வெள்ளாற்றில் அதிக அளவு நீர் வரத்து இருப்பதால் வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டிலிருந்து இப்பகுதியின் மிகப்பெரிய ஏரியான வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு நீர் வரத்து வாய்க்கால் மூலம் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது.

 


 

இதனை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் இன்று  நீர் வரத்து நீர் வெளியேற்றம் அணை பாதுகாப்பு மற்றும் வெலிங்டன் ஏரி பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசும்போது எல்லா வெள்ளாற்றில் 6 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளதாகவும் அதில் 3000 கன அடி வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு கொண்டு செல்ல படுவதாகவும் மீதமுள்ள தண்ணீர் வெள்ளாற்றில் செல்வதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து  கோடை காலத்தில் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகும் என்றார்.

 


 

மேலும் அவர் பேசும்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள 228 ஏரிகள் மற்றும் குளம் குட்டைகள் ஐந்து பெரிய ஆறுகள் உடைப்பு இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளதாக தெரிவித்தார் கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இயல்பு நிலையில் உள்ளதாக தெரிவித்தார். உடன் சப் கலெக்டர் பிரவின்குமார், பொறியாளர் மணி மோகன்,  சோழராஜன், உமா ,வெங்கடேசன், திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், வேப்பூர் வட்டாட்சியர் கமலம், விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.


 

 



 

Previous Post Next Post