வீட்டுமனை பட்ட வழங்காததை கண்டித்து வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு

வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அருகே பேரூராட்சி பகுதி உட்பட்ட ஒண்ணாவது வார்டு டிக்கெட்டை கிராமம் 150 குடியிருப்புகள் உள்ளன 250க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், பவானிசாகர் அணையின் அருகே அமைந்துள்ள சுஜில்குட்டை கிராமத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு போக்கு வரத்து செய்து கொடுக்கவில்லை எனவும் வீட்டு வரி கட்டி வரும் தங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை எனவும் இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் முறையீட்டு வருவதாகக் கூறுகின்றனர்


ஆனால் இதுவரை  தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.  எங்கள் கிராமத்திற்கு ஓட்டு கேட்க யாரும் வரக்கூடாது எனவும் கூறினர் மேலும் அனைவரது வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்களது  எதிர்ப்பை காட்டி வந்தனர் இந்நிலையில் நேற்று மாலையுடன் வேட்புமனு முடிவடைந்த நிலையில் இதுவரை யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஊராட்சி தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேர்தல் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு ஆகிய பொறுப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் யாருமே ஓட்டளிக்க போவதில்லை என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்,