கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பழனியில் குவிந்த பக்தர்கள்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பழனியில் குவிந்த பக்தர்கள்அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கார்த்திகை தீபம் ஏற்றும் விழா திருவண்ணா மலையை போன்றே பழனியில் உள்ள அனைத்து கோயில்களிலும் விமர்சியாக நடைபெறும். சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள்  பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பழனியில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதோடு   திருக்கார்த்திகை   என்பதால் அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளும், மற்றும் மலைக் கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில்   அதிக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ் தானம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.